
கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாலை சாய்பாபா காலனி போலீசார் என்.எஸ்.ஆர் சாலையிலுள்ள தி மேஜிக்கல் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதும், அதற்காக மசாஜிற்காக வரும் ஆண்களிடம் இளம் பெண்களை காண்பித்து எந்தப் பெண் தேவையோ அந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி, பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதி அளித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டரை நடத்தி வந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மகன் முகமது ஹாசிம் ( 32) மற்றும் ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த மோயிஸ் என்பவரின் மகன் முஸ்தான் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களையும், கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் போலீசார் மீட்டனர்.