Published on 07/09/2019 | Edited on 07/09/2019
சென்னை கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்களில் 4 பேர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் கடலில் மூழ்கிய மாணவர்களை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
![4 students drowned in sea](http://image.nakkheeran.in/cdn/farfuture/RFauFOs7FfsY4oYbvBhcyDnbvmVc_z3VvMJ22Fi7ZhY/1567863383/sites/default/files/inline-images/zz23_8.jpg)
சென்னை திருவொற்றியூர் கடல் பகுதியில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 8 பேர் குளிக்க சென்ற நிலையில் 4 மாணவர்கள் கடலில் மூழ்கினர். சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மீனவர்களின் உதவியுடன் மூழ்கிய நான்கு பேரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.