Skip to main content

காவல்துறை உயர் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்!

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
3 senior police officers transferred

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (23.01.2025) உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி (ஐ.பி.எஸ். தரநிலை) நியமிக்கப்படுகிறார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமார் நியமிக்கப்படுகிறார். திருநெல்வேலி  நகர துணை ஆணையராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்