Skip to main content

இலங்கைக்கு தப்பிச் சென்ற அகதிகள் 2 பேர் நடுக்கடலில் கைது.!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற 2 பேரை, அந்த நாட்டு கடற்படை கைது செய்திருக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அந்த நாட்டைச் சேர்ந்த நிஷாந்த்(33), பிரசாந்த்(30) ஆகியோர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர். மண்டபம் முகாமில் தங்கியிருந்த அவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், போலீஸில் வழக்கும் பதிவானது.

 

hh

 

இதனால், அவர்களால் சட்ட ரீதியாக சொந்த ஊருக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்லும்போது, நடுக்கடலில் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொண்டனர்.

இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தப்பிச் சென்ற படகு தங்கச்சிமடத்தை சேர்ந்த லாசர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்திருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்