Skip to main content

எடப்பாடி பழனிசாமி 89 தேர்தலில் நின்றபோது அவரின் சொத்து மதிப்பு என்ன? இப்பொழுது சொத்து மதிப்பு என்ன? தினகரன் கேள்வி 

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
edappadi palanisamy TTV Dinakaran


கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் முதல் அமைச்சராக அமர்ந்திருக்கிறோமே என்ற பண்பாடு இல்லாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவன், இவன் என்று பேசுகிறார். அகங்காரத்தின் உச்சியில் அரக்கத்தனமாக பேசுவதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும். 
 

 

 

அர்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பது மாதிரி ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் போடும் ஆட்டங்கள், ஆசிரியர்களை எல்லாம் சம்பளம் குறித்து பேசுகிறார். 
 

எடப்பாடி பழனிசாமி 89 தேர்தலில் நின்றபோது அவரின் சொத்து மதிப்பு என்ன? 91-96ல் தேர்தலில் நின்றபோது என்ன சொத்து மதிப்பு? இப்பொழுது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து மதிப்பு என்ன?
 

முதலமைச்சராக இருந்து கொண்டு அவன், இவன் என்று பேசவேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சருக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அத்தகைய மாண்பு இல்லாமல் நாலாந்தர அரசியல்வாதி போன்று அவர் பேசுவது இது உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவாக இருக்கிறது. இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்