Skip to main content

“முதல்வர் ‘இந்த சார்கள்’ பற்றி என்ன சொல்லப் போகிறார்?” - இ.பி.எஸ். கேள்வி!

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
What is the cம் going to say about these sir EPS Question

சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தியுள்ளனர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் பதற்றம் மற்றும் அச்சமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி  சுமார்4 கிலோ மீட்டர் அளவிற்குச் சென்று வீட்டை அடைந்தனர். அதே சமயம் இளைஞர்களும் அவர்களின் காரை கொண்டு துரத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக  வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால், ‘இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது?’ என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?. பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?. குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?. யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சார்கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?.

What is the cம் going to say about these sir EPS Question

மாநிலத்தின் பிரதான சாலையான இ.சி.ஆரில் (ECR), பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வழக்கில், நேர்மையாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்