Skip to main content

பாராளுமன்றத்தில் போராட்டம் நடக்கும்! -மேற்கு மண்டல எம்.பி.க்கள் அறிவிப்பு!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

mdmk


"மத்திய பா.ஜ.க.மோடி அரசு அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய ஜனநாயக நெறிமுறைகளுகு நேர் எதிராக உள்ளது. இது இந்தியாவின் பன்முக தன்மையை சீர்குலைக்கிறது. ஒற்றை தலைமை என்கிற சர்வாதிகார ஆட்சி அதிகாரமாகச் செயல்படுகிறார்கள். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள், ஜனநாய சக்திகள் ஒன்றிணைந்து கண்டித்து குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது" எனத் தமிழகத்தில் உள்ள மேற்கு மண்டல நாடாளுமன்ற எம்.பி.க்கள் அறிவித்துள்ளார்கள்.
 


15ஆம் தேதி ஈரோடு ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் பொள்ளாட்சி சண்முகசுந்தரம், திண்டுக்கல் வேலுச்சாமி, திருப்பூர் சுப்புராயன், கரூர் ஜோதிமணி, சேலம் பார்த்திபன், கோவை நடராஜன், நாமக்கல் சின்ராஜ் ஆகிய எட்டு எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்ட இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும், தமிழக அரசு கரோனா தடுப்புப் பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும், தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அரசு திட்ட நிகழ்ச்சிகள் குறித்து அந்தத் தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முறையாகத் தெரிவிப்பதில்லை இது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மீது பார்லிமென்ட் பிரிவிலியேஜ் கமிட்டியில் புகார் கொடுப்பது, கரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும் மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அரசின் திட்டப் பணிகளில் குறைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு தகாத முறையில் பேசி தாக்க முற்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதோடு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் தொலைகாட்சி விவாதத்தில் கரூர் எம்.பி.ஜோதிமணி யிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட பா.ஜ.க. நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 
 

 


இவை மத்திய அரசுக்கு முறையாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று கூறிய எம்.பி.க்கள், "தமிழ் நாட்டில் மட்டும் ஒரு வருடத்தில் 250 கோடி ரூபாய் மொத்த எம்.பி.க்கள் நிதியை மத்திய அரசு எடுத்துள்ளது. பாராளுமன்றம் எப்போது தொடங்கினாலும் இந்த விவகாரம் போராட்ட வடிவமாக மாறும் " என்றார்கள்.

இப்படி ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காக எம்.பி.க்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க தொடங்கினால் தான் மத்திய பா.ஜ.க. மோடி அரசு என்கிற தனி மனித அதிகார தலைமையைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.


 

சார்ந்த செய்திகள்