அ.தி.மு.க கூட்டணியில்தான் தற்போது இருக்கிறோம், அங்கிருந்தபடியேதான் போராடி வருகிறோம், ‘தேவந்திரகுல வேளாளர் என அரசாணை வெளயிட வேண்டும்’ என்கிற கோரிக்கையை எது தடுக்கிறது என்பதை முதல்வர்தான் தெரிவிக்க வேண்டும் என்கிறார் ஜான்பாண்டியன்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பட்டியல் இனத்திலிருந்து விலக்கி தேவந்திரகுல வேளாளர் என அரசாணை வெளயிட வேண்டும் என ஆர்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், "அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது பொய்த்துபோகமல் வருகின்ற தேர்தலுக்குள் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். பிரதமரை சந்தித்தபோது எஸ்.சி. பட்டியலிருந்து எங்களை விலக்கி வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும், அல்லது மக்கள் தொகை ஜனத்தொகையின் அடிப்படையில் எங்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடும்போது அங்கு சென்று அமைச்சர்களை சந்தித்தும், இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வரை சந்தித்தும் இதுகுறித்து வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
அ.தி.மு.க கூட்டணியிலிருந்துதான் தற்போது போராடி வருகிறோம், எங்களின் கோரிக்கையை எது தடுக்கிறது என்பதை முதல்வர்தான் தெரிவிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்." என தெரிவிததார்.