காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து சென்னை நிருபர்கள் சங்கத்தில் தமிழ் தேசிய பேரமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு, தியாகு உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் யார் வந்தாலும் கருப்பு கொடி காட்டப்படும். மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் யாரும் கலந்துகொள்ள மாட்டோம். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மாட்டோம். வரும் 10ம் தேதி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகையிடப்படும். வருமான வரி, ஜி எஸ் டி வரி உள்ளிட்ட எந்த வரியும் செலுத்த மாட்டோம். காவிரி தொடர்பான அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு அளிக்கப்படும். பொதுமக்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாளை நடைபெறவுள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவில்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு. போரட்டங்களுக்காக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தால் சந்திக்க தயார். கன்னடர்களுக்கு எதிராக போராடவில்லை. மத்திய அரசுக்கு எதிராகவே போராடுகிறோம். தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்களுக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஐ பி எல் ஆட்டத்தை பார்க்க வரும் இளைஞர்களிடமும் காவிரி விவகாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட தமிழகத்திற்கு தூரோகம் இழைக்கின்றனர். மத்திய அரசின் அழுத்தத்திற்கு நீதிபதிகளே பயப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமகவே சுங்கச்சாவடியை தாக்கியவர்கள் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.