சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் அதிமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதிமுக பொன்விழா கொண்டாட்டம், புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செல்லூர் ராஜூ, தனபால், ஜெயக்குமார், பொன்னையன், விஜபாஸ்கர் போன்ற மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment