Skip to main content

“எடப்பாடியின் கமிஷன் கரப்க்ஷனை பார்த்து கரோனா ஓடிவிட்டது..” - உதயநிதி ஸ்டாலின்

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

Udhyanithi stalin speech at chidambaram

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்.  அவர் நேற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் இரவு சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.  

 

அப்போது அவர், “இன்று 15 இடங்களில் தான் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால் 25 இடங்களில் பொதுமக்களைச் சந்தித்திருக்கிறேன்.  செல்லும் இடமெல்லாம் மக்கள் மிகவும் எழுச்சியாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. தி.மு.க. ஆட்சி அமைவது நிச்சயம். எடப்பாடியின் கமிஷன், கரப்க்ஷனை பார்த்து, இவர் நம்மைவிடப் பெரிய ஆளு என கரோனாவே ஓடிவிட்டது. 

 

அப்போது, "எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல, தவழ்ந்து வந்து முதல்வரானார் எனவே அவரையும் அ.தி.மு.க.வையும் அகற்றிவிட்டு தி.மு.க.விற்கு வாக்களித்து ஆட்சி அமைக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என்று பேசினார்.

 

இறுதியில், அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என உறுதிமொழியை அவர் வாசிக்க பொது மக்களும் கட்சியினரும் அதைத் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்