
மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய ஆதரவை தந்துள்ளனா்.
நேற்று முன்தினம் மத்திய அரசு விவசாயிகளோடு நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கருப்புகொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆர்பாட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளா் தியாகராஜன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டா்கள், என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.