Published on 01/09/2018 | Edited on 01/09/2018
எந்த பதவியாக இருந்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்–அமைச்சர் அறிவித்த விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். மழைக்கால நடவடிக்கை குறித்து முதல்–அமைச்சர் மாவட்டம் வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றார்.
தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு அ.தி.மு.க.வில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய பற்றி கேட்டதற்கு, பொதுவாக கட்சியில் மட்டும் இல்லை, எந்த பதவியாக இருந்தாலும் தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புகள் தேடி வரும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்றார்.