மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசினார்.
ஒரு தேர்தல் நடத்துகிறீர்கள், மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி வந்துவிடுகிறது. திடீரென ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடுகிறதென்றால், மீதம் இருக்கும் காலத்திற்கு அங்கு தேர்தல் நடக்குமா, நடக்காதா. ஒருவேளை மாநிலங்களிலெல்லாம் தேர்ந்தெடுத்த ஆட்சி நிலையாக இருந்து, மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விட்டால் என்ன செய்யப்போகிறார்கள். மத்தியில் ஆட்சி கலைந்ததென்றால், மாநிலத்தின் ஆட்சியையும் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் வைக்கப் போகிறார்களா?
இப்படிப்பட்ட திட்டத்தை சூசகமாக கொண்டுவந்திருப்பதன் காரணம் என்னவென்றால், இதற்கு பிறகு இந்தியாவில் தேர்தலே இருக்காது. ஹிட்லர் இப்படித்தான் தேர்ந்தெடுக்கபட்டபோது, தேர்தல் முறை இல்லாத அளவிற்கு செய்தார், அதேமுறை இப்போது வந்திருக்கிறது.