Skip to main content

டாஸ்மாக் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ம.நீ.ம. மவுரியா கேவியட் மனு தாக்கல்

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
tasmac shop



தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் மேலும் சிலரும் தொடர்ந்திருந்த வழக்கில், அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் உடனடியாக இழுத்து மூடவேண்டும். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது.


ஒருவேளை ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் முறையை மேற்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக, கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா கால ஊரடங்கில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்பதற்காக சட்ட ரீதியாக எவ்வளவு போராட முடியுமோ அத்தனை முயற்சிகளையும் எடுப்போம் என தெரிவித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ். 

 

 

சார்ந்த செய்திகள்