Published on 09/05/2020 | Edited on 09/05/2020
![tamimmun ansari](http://image.nakkheeran.in/cdn/farfuture/L6LTVsrObEfOJR6-IEoREYMCg3daykJ0Ru2i8CPibKI/1589020875/sites/default/files/inline-images/600_41.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தியில்லை என்கிற அறிக்கையை தொடர்ச்சியாக டெல்லிக்கு அனுப்பி வருகிறது மத்திய உளவுத்துறை. இந்த பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது என்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணித்து, வாரம் ஒரு முறை ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில கவர்னர்களுக்கும் டெல்லியிலிருந்து ஒரு உத்தரவு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், தமிழக நிலவரங்களை மிக கனமாக தொகுத்து வருகிறது தமிழக ராஜ்பவன். கோடிக்கணக்கில் நிதிகள் புழங்கும் முக்கியத் துறைகளை பட்டியலிட்டு அத்துறைகளின் உயரதிகாரிகளிடமிருந்து தகவல்கள் தொகுக்கப்படுகின்றன. இந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான கேபினெட்டில் இருக்கும் 12 அமைச்சர்கள் தொடர்பான ஊழல் ரெக்கார்டுகள் தயாராகியிருக்கிறது. விரைவில், அந்த ரெக்கார்டுகள் டெல்லிக்குப் பறக்கவிருக்கிறது என்கிறது கோட்டை வட்டாரம்!