நாகர்கோவில் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 21-வது கிறிஸ்துமஸ் விழா அருமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. இதில் அமமுக துணைப்பொதுச்செயாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர்,
மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. இங்கு மதசகிப்புத்தன்மை, சகோதரத்துவம் உள்ளது. இதனை துண்டாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சிலர் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வருகிற புத்தாண்டில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இங்கிருந்துதான் மாற்றம் வரவேண்டும். அதற்கு தமிழக மக்கள் முன் வர வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என்று கூறுகிறார்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தின் நலனில் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் இதனை நாம் கண் கூடாக பார்க்கிறோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.