Skip to main content

பட்டியலை காட்டிய தினகரன்: வேட்பாளர்களை மாற்றிய சசிகலா

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் காட்டியுள்ளார். அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் இருப்பதையும் கூறியுள்ளார். அதில், இவருக்கு ஏன் சீட்? என்று சிலரைப்பற்றி சசிகலா கேள்வி எழுப்பியபோது, ஒவ்வொரு வேட்பாளரையும் தேர்வு செய்ததன் காரணத்தை தெளிவுப்படுத்தியிருக்கிறார். பின்னர் சசிகலா சொன்ன ஆலோசனைப்படி சில வேட்பாளர்களை மாற்றியுள்ளார். 

 

sasikala-ttcd


அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் இந்த தேர்தலில் கடுமையாக பணம் செலவு செய்யப்போகிறார்கள். இந்த அளவுக்கு நாம் பணம் செலவு செய்ய முடியாது. தற்போது பண நெருக்கடி உள்ளது. வேட்பாளர்கள் சிலர் தலைமை தங்களுக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களிடம் என்ன சொல்வதன்று தெரியவில்லை. அதேநேரத்தில் தற்போது பணம் இல்லை என்பதையும் தெரிவித்தோம். அப்போது சில நிர்வாகிகள், பணம் இல்லாத சூழலில் நாம் போட்டியிட்டு அசிங்கப்பட வேண்டாம், எம்.பி. தேர்தலை புறக்கணித்துவிட்டு, இடைத்தேர்தலில் கவனம் செலுத்தலாம் என்று வலியுறுத்துவதை தெரிவித்துள்ளார்.
 

அப்போது சசிகலா, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என கேட்டுள்ளார். அதற்கு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விரும்பாத நிர்வாகிகள் நம் பக்கம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ போட்டியிட வேண்டும். இல்லையென்றால் நம் மீதுள்ள இமேஜ் போய்விடும் என்று தெரிவித்துள்ளார் தினகரன். 
 

இதனிடையே இந்த சந்திப்பின்போது, தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விவேக் அழுத்தம் கொடுப்பதையும் சசிகலாவிடம் தெரிவித்துள்ளார் தினகரன். 

 

சார்ந்த செய்திகள்