நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கோர்ட்டு விசாரணைக்கு வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடும் என்கிறார் ரஜினி. அப்படி என்றால் எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தபோது மருத்துவமனைக்கு சென்றீர்கள். போராட்டத்தல சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லும்போது போக முடிகிற உங்களால் இப்போது போக முடியாதா. இதற்கு ரஜினிகாந்த் பதில் சொல்ல வேண்டும்.
வருமான வரித்துறை ரஜினிகாந்துக்கு ரூபாய் 66 லட்சம் விலக்கு அளித்தது. அதே வழக்குதானே சசிகலாவுக்கும். சசிகலாவுக்கு ஒரு நீதி, ரஜினிகாந்துக்கு ஒரு நீதி. அவருக்கு தண்டனை. இவருக்கு சலுகையா? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டோம். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்.