Published on 10/04/2025 | Edited on 10/04/2025

கடலூர் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் சென்று கொண்டிருந்த பொழுது அதே பகுதியில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து சாலையை ஒட்டி இருந்த வயல் பகுதியில் இறங்கியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.