Published on 20/03/2022 | Edited on 20/03/2022

மறைந்த 'புதிய பார்வை' ஆசிரியர் நடராஜனின் நினைவு தினத்தை ஒட்டி இன்று தஞ்சையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள நடராஜனின் சமாதியில் மலர் வளையம் வைத்து சசிகலா மரியாதை செய்தார். அதேபோல் நடராஜன் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ன் சகோதரரும், அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.ராஜாவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.