Skip to main content

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?-ஓபிஎஸ் விமர்சனம்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

ADMK OPS Review!

 

திமுகவின் நடவடிக்கை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் உள்ளதாக தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இரண்டு மாத நிலக்கரி தேவைக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும், நிலக்கரியும் வந்து சேராததே பிரச்சனைக்கு காரணம். மின்வெட்டு தொடர்பான புகார்களை 9498794987 என்ற சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். தற்பொழுது இந்த எண்ணிற்கு வரும் புகார்கள் 99 சதவிகிதம் தீர்வு காணப்படுகிறது.தமிழக பாஜக தலைவர் மின்தடை குறித்து மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பி மலிவான விளம்பரத்தைத் தேடி வருகிறார். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் நோக்கம்''என்றார்.

 

ADMK OPS Review!

 

இந்நிலையில் மின்வெட்டு தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் உள்ளது. கோடையில் மின்வெட்டு அதிகரிக்கும் என்ற நிலையில் அதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. தேவையான நிலக்கரியை பெற்று மின்வெட்டு பிரச்சனைக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்