இந்துத்வ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சியை மதிப்பாய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/pR3YyEUQFnYHZzNbmeCGI-HgelnGuvBZ6T8JJKey60w/1533347662/sites/default/files/inline-images/mkk%27.jpg)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்காண்டுகளாக ஆட்சி செய்துவருகிறது. இந்த நான்காண்டு கால ஆட்சி குறித்து பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சார்பில் வரும் மே 28 முதல் மே 31 வரை மதிப்பாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் ஆட்சி அடுத்தாண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தத்தாத்ரேயா ஹோசபலே மற்றும் கிருஷ்ண கோபால் ஆகியோரும், பா.ஜ.க.வில் இருந்து அதன் தலைவர் அமித்ஷா மற்றும் ராம் லால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சகங்களும் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பன குறித்து விவாதிக்கப்படும். மேலும், பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பணப்புழக்கம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.