Skip to main content

கட்சியில் சேர்ந்த நாளிலேயே அ.ம.மு.க. வேட்பாளரான ராஜவர்மன்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

rajavarman join with ammk party is the candidate of sattur

 

'தன்னுடைய ஒரே லட்சியம், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதுதான்' என்று பேட்டியளித்த சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனை,  அ.தி.மு.க. தலைமை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.

 

ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மனநிலையோடு, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும், முடிந்த அளவுக்கு ராஜவர்மன் காட்டிவந்த விசுவாசத்துக்குப் பலனில்லாமல் போனது. காரணம், தன்னை மீறி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில், யாரும் எதுவும் செய்துவிட முடியாதென்ற நிலையை, ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தக்கவைத்திருப்பதுதான். 

 

rajavarman join with ammk party is the candidate of sattur

 

சாத்தூர் தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு எதிராக சுயேச்சையாக நின்று போராடுவதைக் காட்டிலும், அ.ம.மு.க. வேட்பாளராகக் களமிறங்குவதே சரியாக இருக்கும் என முடிவெடுத்து, டிடிவி.தினகரனைச் சந்தித்த ராஜவர்மன், கட்சியில் சேர்ந்த நாளிலேயே, அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

 

பழிதீர்ப்பதை மட்டுமே மனதில் நிறுத்தி, அதற்காகப் பெருமளவில் பணத்தைச் செலவழிக்க முடிவெடுத்துள்ள ராஜவர்மன், இந்தத் தேர்தல் களத்தில் வினோதமான வேட்பாளர்தான்!

 

 

சார்ந்த செய்திகள்