வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி’. இதில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![pmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/YFaR8vZD3e7ozbrgg0fYv4Gp0S2Rh2vfwdkrYplguo4/1583315115/sites/default/files/inline-images/666_3.jpg)
இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திரௌபதி படத்தை குடும்பத்துடன் பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் திரௌபதி என்று கூறியிருந்தார்.
1. திரௌபதி திரைப்படம் ஒரு சாதிவெறி திரைப்படம்: கி.வீரமணி -- காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 4, 2020
இந்த நிலையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி திரௌபதி படம் குறித்து கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எல்லா சாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி.வீரமணியையே சாரும். அதற்காக அவருக்கு சாதிகளை ஒழித்த சாதனையாளர்(?!) என்ற பட்டத்தைக் கொடுக்கலாம்.சாதி ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துகளை சுரண்டி தின்றதை தவிர இவர்கள் செய்த சேவை என்ன?
மேலும் திரௌபதி திரைப்படம் ஒரு சாதிவெறி திரைப்படம்: கி.வீரமணி -- காமாலைக் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். அதைப்போலத் தான் நாடகக் காதல் ஆதரவாளர்களுக்கு சீர்திருத்தங்களை சொல்லும் படம் கூட சாதிவெறி படமாக தெரிகிறது. அய்யோ பாவம்! என்று கூறியுள்ளார். ராமதாஸின் இந்த கருத்துக்கு திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.