உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,069 லிருந்து 2,301 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335, தமிழ்நாடு 309, கேரளா 286, டெல்லி 219, ஆந்திர பிரதேசம் 132, ராஜஸ்தான் 133, கர்நாடகா 124, உத்தரப்பிரதேசம் 113, தெலங்கானா 107, மத்தியப்பிரதேசம் 99 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 லிருந்து 56 ஆக உயர்ந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 156 லிருந்து 157 ஆனது.இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்: உங்கள் இரு சக்கர ஊர்திகளை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள். அத்தியாவசியத் தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் அவை சாலைகளை எட்டிப் பார்க்கக் கூடாது. அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு!(1/3)
— Dr S RAMADOSS (@drramadoss) April 2, 2020
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கரோனா வைரஸ் பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள் : உங்கள் இரு சக்கர ஊர்திகளை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள்.அத்தியாவசியத் தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் அவை சாலைகளை எட்டிப் பார்க்கக் கூடாது.அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு என்றும், இளைஞர் சக்தி நினைத்தால் இமயத்தையும் இழுத்து வர முடியும்.அப்படிப்பட்ட உங்களால் தான் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முடியும். நாட்டு மக்களின் உயிர்கள் உங்கள் கைகளில் இருப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள். அவர்களை[ப் பாதுகாப்பதற்காகச் சாலைகளுக்கு வராமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாகக் கடைப்பிடியுங்கள்.சமூக இடைவெளிக்கு உதாரணமாக வாழுங்கள்.வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்குங்கள். அரசுக்கு முழுமையாக ஒத்துழையுங்கள். விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் காண உதவுங்கள் ! என்று குறிப்பிட்டுள்ளார்.