Published on 05/08/2021 | Edited on 05/08/2021
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் நிதி - நிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.
இது வழக்கமாக புத்தக வடிவில் கையில் தரப்படும் பட்ஜெட்போல் அல்லாமல், காகிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை பார்க்கும் வகையில் கணினி பொருத்தும் பணி நடைபெறுகிறது. அனைவருக்கும் PDF வடிவில் கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். இந்த கையடக்க கணினியில் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தவிர வேறு எதனையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.