Skip to main content

அமமுக பலம் குறித்து ஓ.எஸ்.மணியன் கருத்து!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

OS Maniyan  opinion about AMMK strength

 

சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

 

நாகை அடுத்த நாகூர் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் அமையவுள்ள அந்த கட்டிடத்திற்கு தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். 

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “அதிமுகவில் உண்மையான தொண்டனாக இருக்கிறவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி எந்தச் செயலையும் செய்யமாட்டார்கள். சசிகலா வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்களே இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல்களை சந்தித்த அமமுகவின் பலம் என்ன என்பது நாட்டுக்கே தெரியும்" என்றார்.

 

மேலும், அவரிடம் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு, "சசிகலாவின் சொத்துகள் முடக்கப்படுவது மத்திய அரசின் நடவடிக்கை. நீதிமன்ற நடவடிக்கைக்குக் கட்டுப்பட்டது. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர். சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் கிடையாது. அதிமுகவின் தலையீடு கிடையாது" என்று பேசி முடித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்