திருவண்ணாமலை கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க., அ.தி.மு.க. செய்யாததை விட தமிழகத்துக்கு அதிக திட்டங்களை மோடி வகுத்துள்ளார். பாலாறு- தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக வளர்ச்சிக்காக மோடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் கூறியது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் இறந்த இந்நேரத்தில் ஒரு கட்சியை பற்றி குறை கூறுவது நாகரிகம் இல்லை. கலைஞரின் மூத்த மகன் மு.க.அழகிரி, தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத்தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர்.
மு.க.ஸ்டாலின் மேயராக, அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக திறம்பட செயல்படுகிறார். ஆகவே, தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பாரதீய ஜனதா கட்சிக்கு இல்லை என்றார்.