Skip to main content

அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன? செல்லூர் ராஜு, ஜெயக்குமார் எல்லை மீறி பேச வேண்டாம்... ஹெச்.ராஜா 

Published on 31/08/2020 | Edited on 31/08/2020
hraja

 

 

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "மத்திய நிதியமைச்சரை விமர்சனம் செய்த முன்னாள் நீதிபதி சந்துருவின் பேச்சு கண்டனத்துக்குரியது. அண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன எரிச்சல்.

 

அமைச்சர் செல்லூர் ராஜு இப்படி அப்படி பேசுவது வழக்கமாக போய் விட்டது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் எல்லை மீறி பேச வேண்டாம். கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக அரசை நான் என்றும் விமர்சனம் செய்து பேசியதில்லை. தமிழக அரசு அதிகாரிகள் செய்யும் தவறை சுட்டி காட்டி வருகிறேன். அமைச்சர்கள் பாஜகவை விமர்சனம் செய்து பேசுவது கூட்டணிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

 

கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் சர்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்களா என சந்தேகம் எழுகின்றன. பாஜகவை இழிவாக பேசுவதும், பிரதமரை இழிவாக பேசுவதும் ஒன்று தான். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். நாடு முழுக்க பாஜக செயல்பட்டு வருகிறது. ராகுல்காந்தி குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்