விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு இன்று (03-01-25) தொடங்கியது. இன்று தொடங்கும் மாநாடு, வருகிற 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், எம்.பிக்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பிரகடனம் செய்துவிட்டாரா?. தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று பேசினார்.