115 மக்களவைக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. குறிப்பாக 20 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் வாக்குப் பதிவு காலை முதலே விறு விறுப்பாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக மதியத்திற்கு மேல் கேரளாவில் மழை வரலாம் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு காரணமாக கேரளாவின் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும், காலையிலேயே ஆண் பெண் வாக்காளர்கள் திரண்டு வந்திருக்கின்றனர்.
எந்தவிதமான பிரச்சனையுமின்றி வாக்குப் பதிவில் விறுவிறுப்பு காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணிநேர நிலவரப்படி கேரளாவின் வாக்குப் பதிவு 35 சதிவிகிதமாகியிருக்கிறது.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸின் வி.ஐ.பி. வேட்பாளரான சசிதரூர். வயநாட்டில் காங்கிரஸின் தேசிய தலைவர் ராகுல்காந்தியும் போட்டியிடுகின்றனர். முதல் முதலாக ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதால் இதர பகுதிகளைக் காட்டிலும் வயநாட்டில் வாக்குப் பதிவிற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. 12 மணி நேர நிலவரப்படி வயநாட்டில் 36 சதவிகித வாக்குப்பரிவு நடந்திருக்கிறது.