Skip to main content

கர்நாடகா இடைத்தேர்தல் : பா.ஜ.க.வை வீழ்த்தியது காங்கிரஸ்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 

Karnataka

 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், 9,746 போலி வாக்களர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால், அந்தத் தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 
 

இந்நிலையில், மே 28ஆம் தேதி அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முனிரத்னா, பா.ஜ.க.வின் துளசி முனிராஜூ கவுடா மற்றும் ம.த.ஜ. கட்சியின் ராமச்சந்திரா ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 53% வாக்குகள் பதிவாகியிருந்தன.
 

இதையடுத்து, இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத்னா முன்னிலை வகித்தார். ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த நிலையில், முனிரத்னா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட துளசி முனிராஜூ கவுடா 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
 

சார்ந்த செய்திகள்