Published on 19/03/2019 | Edited on 19/03/2019

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் கடலூர் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார் டி. வெங்கடேசன். இவர், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கட்சியில் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளராக இருந்த சி.கே.குமாரவேல் நேற்று விலகினார். அவர் விலகியதையடுத்து, அவரால் கட்சியில் சேர்ந்த தானும் விலகுவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து விலகியுள்ளனர்.