TN ASSEMBLY ELECTION IJK PARTY CONTEST THE ASSEMBLY CONSTITUENCIES LIST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் 20 சட்டமன்றத் தொகுதிகளின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

TN ASSEMBLY ELECTION IJK PARTY CONTEST THE ASSEMBLY CONSTITUENCIES LIST

அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர் (தனி), செங்கம் (தனி), கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர் (தனி), அரியலூர், விருத்தாச்சலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளின் பெயர் பட்டியலும், ஐ.ஜே.கே. போட்டியிடும் 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களும் பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.