Skip to main content

எடப்பாடி அழைப்பு விடுத்தும் வர மறுத்த ஜெயலலிதா விசுவாசி!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

ஜெ.விடம் உதவியாளரா இருந்த பூங்குன்றனைத் தன்னோடு இருக்கும்படி முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மீது அதிக விசுவாசம் கொண்டவர் பூங்குன்றன்.  ஜெயலலிதா இறந்தநாளை மனசில் வச்சி, காசிக்குப் போய் திதி கொடுத்தாராம். அவருக்கு எடப்பாடி பலமுறை அழைப்பு கொடுத்தும் பூங்குன்றனிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால் பூங்குன்றனுக்கு நெருக்கமானவரான திருக்கடையூர் கோவில் கணேஷ் குருக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மூலம் அணுகியது எடப்பாடி தரப்பு. 
 

ops



குருக்கள்கிட்டேயும் பூங்குன்றன், ஏற்கனவே சசிகலா என்னை தினகரனுக்கு உதவியாளராக இருன்னு அனுப்பிவச்சார். அதனால் தினகரனைப் பார்க்கப் போய், மூன்று மணி நேரம் காத்திருந்தும் பார்க்க முடியலை. கார்டனில் ஜெ.வுக்கு ஒரு பிள்ளைபோல் இருந்தேன். அப்படியே மனசில நினைச்சிக்கிட்டு இருந்திடுறேன். எந்தப் பக்கமும் போக விரும்பலைன்னு மறுத்துட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்