Skip to main content

மோடி பேச்சுக்கு மரியாதை இல்லை! - மம்தாவை சூர்ப்பனகை எனக்கூறிய பாஜக எம்.எல்.ஏ.!

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என அழைத்து மீண்டும் சர்ச்சையில் இடம்பிடித்திருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்.

 

Surendra

 

பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பிரபலமானவர். 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியா - பாகிஸ்தானுக்கும், இஸ்லாமுக்கும் - பகவானுக்கும் இடையிலான தேர்தல், உன்னாவ் சிறுமி கற்பழிப்பு சாத்தியமற்றது; குல்தீப் சிங் செங்கர் நிரபராதி, 2024ஆம் ஆண்டு இந்தியா முழுமையான இந்து நாடாக மாறும் போன்ற இவரது கருத்துக்கள் இதுவரை சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

 

அந்தவரிசையில் தற்போது மேற்குவங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என இவர் கூறியது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா பகுதியில் பேசிய அவர், ‘மேற்குவங்கம் மாநில வீதிகளில் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முதலமைச்சர் எதையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்துக்கள் அந்த மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை. இனியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றால், வங்க மாநிலம் இன்னொரு ஜம்மு காஷ்மீர் ஆகிவிடும். கன்ஷியாம் சிங் பெயரில் இருக்கும் கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் வசிப்பார்கள் ’ என பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தனது கட்சி உறுப்பினர்களிடம், ‘கேமராவைப் பார்த்தவுடன் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல், உலறிக் கொட்டாதீர்கள். உங்கள் கருத்துக்களின் மூலம் நீங்களே மீடியாக்களுக்கு மசாலா கொடுத்துவிடுகிறீர்கள்’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்