Published on 27/05/2019 | Edited on 27/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்த்ரநாத் குமார் வெற்றி பெற்றார்.அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் இவரே என்பது குறிப்படத்தக்கது.
அதிமுக வேட்பாளர்களில் யாரும் வெற்றி பெறாத சூழ்நிலையில் சீனியர் வேட்பாளர்கள் பலர் ராஜ்யசபா எம்.பி. சீட் வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.மேலும் அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு இணை அமைச்சர் பதவி பாஜக தலைமை கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.அதோடு கட்சியில் சீனியர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்றும் அதில் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற தகவலும் உள்ளது.இதனால் அதிமுகவிற்கு ஒரு ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் கொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததால் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்களில் ஒருவரை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் ஒரு தகவல் வருகிறது.கடந்த முறை குமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.