காயத்ரி ரகுராமின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என பாஜக நிர்வாகி ஆலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.
மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நினைவாக சென்னை பெரம்பூரில் மகளிர் கால்பந்து போட்டி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இவ்விழாவினை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநிலச் செயலாளர் ஆலிஷா அப்துல்லா துவக்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பாஜக துணை இல்லாமல் இந்த நிகழ்வு நடக்காது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அதிக அளவில் வேலைகள் இருந்ததால் இதில் கலந்து கொள்ளவில்லை. நான் பாஜகவில் தான் உள்ளேன். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஒரு பிரச்சனையும் இல்லை. காயத்ரி ரகுராம் கட்சியில் இல்லை. அவர் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். அவரது கருத்துகளை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கட்சியில் இருப்பவர்கள் ஏதாவது கூறினால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து விளையாட்டுகளிலும் வீரர்களுக்கு காயங்கள் என்பது இருக்கும். என் காலில் கூட 12 ப்ளேட்கள் உள்ளது. சரியான மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.