Skip to main content

கர்நாடக தேர்தலில் தோல்வி - வாக்கு எந்திரத்தைக் குற்றம்சாட்டும் காங்கிரஸ்!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

கர்நாடக சட்டபைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தில் மே 12ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில் 109 தொகுதிகளில் முன்னிலையுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி 72 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

 

mohan

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ், ‘மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்தால், இன்னொரு கட்சிக்கு வாக்குகள் சென்றிருக்கின்றன. கர்நாடகாவின் தற்போதைய சூழலில் இப்படியொன்று நடக்க வாய்ப்பேயில்லை. அனைத்து கருத்துக்கணிப்புகளும் சித்தராமையாவுக்கு ஆதரவாகவே இருந்தன. அவரது ஆட்சியில்தான் மாநிலத்திற்கு அதிகமான முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. அவருக்கே இந்தநிலைமை என்றால் மற்ற அரசியல்வாதிகளும் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

 

மேலும், ‘அனைத்து எதிர்க்கட்சிகளும் வாக்கு எந்திர முறையை மாற்றி, வாக்குச்சீட்டு முறையிலேயே மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்துள்ளன. ஆனால், அதை ஏற்றுக்கொள்வதில் பா.ஜ.க. மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்