Skip to main content

“சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ளது என்பது குரூரச் செயல்” - திருமாவளவன் கண்டனம்

Published on 24/03/2025 | Edited on 24/03/2025

 

Thirumavalavan condemns cruel act at savukku shankar house

சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வரும் யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில், தூய்மை பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. 

எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தி.மு.க அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த  இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்