இந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிதும் கவனிக்கப்படுவது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடைய பிரச்சாரம் தான் . அவர்களுடைய பிரச்சாரம் பெருவாரியான இளைஞர்களை கவரும் விதமாக இருப்பது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது .இந்த நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுபாஷினியை ஆதரித்து அந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது இந்தியாவிலேயே பாராளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடம் ஒதுக்கிய ஒரே கட்சி நம்ம நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்றும் விவசாயிகளையும், மாணவர்களையும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார் என்பதை வோட்டு போடும் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் .
இந்த தேர்தலில் மத்திய அரசும் , தேர்தல் ஆணையமும் நமக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர் அதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை திட்டமிட்டே சரியாக தெரியாத மாதிரி மங்கலாக வைத்துள்ளனர். இதனால் நாங்கள் வாக்கு கேட்கும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக தெரிகிறதோ அந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பொது மக்களைப் பார்த்து சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் இந்த தேர்தலை மாற்றத்துக்கான தேர்தலாக பாருங்கள். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுபாஷினிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றும் பேசினார் . சமூக வலைத்தளங்களில் நாம் தமிழரின் சின்னமான விவசாயி சின்னம் வாக்கு எந்திரத்தில் மங்கலாக இருக்கிற மாதிரி ஒரு புகைப்படம் பரவிக்கொண்டு இருக்கிறது .