Skip to main content

டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... அதிருப்தியில் கவர்னர்... எடப்பாடி போட்ட உத்தரவு!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி விசாரித்த போது, கவர்னர் மாளிகையின் பவர்ஃபுல்லாக இருந்தவர் ராஜகோபால். சமீபகாலமாக டெல்லிக்கும் ராஜ்பவனுக்கும் சில முரண்பாடுகள் இவரால் ஏற்பட்டதாக கவர்னர் ஃபீல் பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தான் சந் திக்கும் சிக்கல்களுக்கும் ராஜகோபால்தான் காரணம் என்று கவர்னர் நினைப்பதால், ராஜகோபால் சம்பந்தமான உளவுத்துறையின் ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு, கவர்னரிடம் டெல்லி ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்கின்றனர். அவர் ராஜகோபால் மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக சொல்கின்றனர். 
 

governor



இதனையடுத்து டெல்லியிடமிருந்து கோட்டைக்கு உத்தரவுகள் பறந்து வர, முதல்வர் எடப்பாடி அவரை தமிழக அரசின் எந்தத் துறைக்கு அழைத்துக்கொள்வது என்று ஆலோசித்தார். இதையறிந்த ராஜகோபால், நான் இப்போதைய தலைமைச் செயலாளரை விடவும் சீனியர். அவர் எனக்குக் கீழ் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்தே ராஜகோபால் தலைமைத் தகவல் ஆணையராய் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜ்பவன் வட்டாரம் நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்