குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறக் காரணமான அ.தி.மு.க. கண்டுகொள்ளவில்லை. இதனால் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு சட்டமன்றத்தில் பதில் கூறிய அமைச்சர் உதயகுமார், அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மக்களை ஏமாற்றமாட்டோம். அதே சமயம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் பற்றிய விபரங்களை யாரும் தரத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்காக கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் 99 சதவிகிதம் இந்து சமூக மாணவர்களையே தேர்ந்தெடுக்கும்படி எடப்பாடி அரசால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கு என்கின்றனர். இதற்கு சிறுபான்மையினர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்திலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் பதில் வரும் வரை இதை அமல்படுத்த மாட்டோம் என எடப்பாடி அரசு கூறியுள்ளது.