Published on 04/07/2019 | Edited on 04/07/2019
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர்.
நேற்று சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் பொது பணித்துறை குறித்து சட்டப்பேரவையில் பேசினார் . அதற்கு முதல்வர் எடப்பாடி உடனடியாக பதில் கொடுத்தார்.உடனே எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அதற்கு, முதல்வரின் பண்பாட்டை பாராட்டுகிறேன். இதையே, மற்ற அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும்,'' என்றார்; இதை கேட்டவுடன் சட்ட சபையில் சிரிப்பலை எழுந்தது.அப்போது குறுக்கிட்ட முதல்வர், ''மானிய கோரிக்கையில், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பேசியது மட்டும், பத்திரிகைகளில் வரும்; நாங்கள் அளிக்கும் பதில் வராது. எனவே, அமைச்சர்கள், உடனுக்குடன் பதில் நீங்கள் கேள்விகளுக்கு கொடுப்பார்கள் என்று எடப்பாடி தெரிவித்தார்.