இந்திய முழுவதும் ஏழு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.இதில் மே 19ஆம் தேதியான நேற்றைய தினமோடு அணைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்பு கருத்துக்கணிப்பு தெரிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு உள்ளதால்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு அனுமதி வழங்கியது.இந்த நிலையில் நேற்று மாலை பெரும்பாலான செய்தி சேனல்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டனர்.இதில் பெரும்பாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும் மாநிலத்தில் திமுக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவை வரவேற்று இரண்டு கட்சிகளுமே பேசவில்லை.இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, மாநிலத்தில் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு இல்லை அதனால் இந்த கருத்துக்கணிப்பை ஆதரித்து பேசினால் அது பாஜகவுக்கு வந்த கருத்துக்கணிப்பு முடிவு உண்மையாகிவிடும் மேலும் காங்கிரஸ் கட்சியினர் திமுக மீது அதிருப்தி அடையவும் வாய்ப்பு உள்ளது என்பதால் மே 23க்கு பிறகு மக்களின் தீர்ப்பு தெரிந்து விடும், அதனால் இந்த கருத்துக்கணிப்பை பற்றி ஒன்றும் சொல்லமுடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதே போல அதிமுகவுக்கு இந்த கருத்துக்கணிப்பில் பெரும் பின்னடைவு என்று வந்துள்ளது அதனால் இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் பொய் என்று கூறினால் மத்தியில் பாஜகவுக்கு வந்த பெரும்பான்மை கருத்துக்கணிப்பு பொய் என்று அர்த்தமாகிவிடும் அதனால் அவர்களும் இந்த கருத்துக்கணிப்பை பற்றி எதுவும் சொல்லாமல் மே 23க்கு பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர். இன்னும் ஒரு சிலர் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் அதிமுக அரசு தொடர மறைமுக ஆதரவு கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.