







Published on 02/04/2021 | Edited on 02/04/2021
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை உதவியுடன் ஐ.டி. ரெய்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று (02.04.2021) சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சமரீசன் இருவருக்கும் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.