Skip to main content

கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க நடத்தும் இணையவழி மாரத்தான் பந்தயம்!!! (படங்கள்)

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் சர்வதேச இணையவழி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. அதற்கான இணையத்தளத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று துவங்கி வைத்தார். கலைஞர் நினைவாக நடத்தப்படும் இந்த மாரத்தான் ஏற்பாடுகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் செய்துவருகிறார்.

 

மேலும், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் “உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும், இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் www.kalaignarmarathon.com என்ற இணையத்தளத்தின் வாயிலாகப் பதிவு செய்து பங்கேற்க முடியும். நாளை (07.08.2020) முதல் ஆகஸ்ட் 31 வரை இம்மாரத்தானில் ஓடலாம். வீட்டு மாடியில், தோட்டத்தில், நடைபயிற்சி இயந்திரத்தில் (ட்ரட்மில்), எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தங்கள் வசதிவாய்ப்புகளுகேற்ப ஓடலாம். 

 

போட்டியில் பங்கெற்றதற்கான சான்றிதல் இணையம் மூலம் அனுப்பப்படும். பதக்கம் அஞ்சல் மூலம் அவர்களின் முகவரிக்கே அனுப்பப்படும். இதில் கலந்துகொள்ள வயது தடையில்லை. மேலும், நுழைவுக் கட்டணமாக ரூ.300 பெறப்படும். அவ்வாறு பெறப்படும் தொகையில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டு அவை செப்டம்பர் முதல் வாரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்