Published on 03/05/2021 | Edited on 03/05/2021

திருச்சி மணப்பாறை தொகுதியில் 30 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமது, 95 ஆயிரத்து 931 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 85 ஆயிரத்து 35 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், 10,896 வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் அப்துல் சமது வெற்றி பெற்றார்.