Published on 15/04/2023 | Edited on 15/04/2023

அதிமுக ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்புகளாகப் பிரிந்த பின் ஓபிஎஸ் ஆதரவாளராக நின்றவர் கோவை செல்வராஜ். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து விலகி கடந்தாண்டு நவம்பர் 7 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின், அதிமுக தற்போது கம்பெனி ஆகிவிட்டது. அக்கட்சியில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 14 வயதில் உதயசூரியனுக்காக வாக்கு கேட்ட நான் மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவை செல்வராஜுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை செல்வராஜ் தற்போது செய்தித் தொடர்புத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீனவர் அணித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.